??.ரூ.20 லட்சத்திற்குபருத்தி விற்பனை
??.ரூ.20 லட்சத்திற்குபருத்தி விற்பனை
??.ரூ.20 லட்சத்திற்குபருத்தி விற்பனை
ADDED : மார் 25, 2025 01:05 AM
??.ரூ.20 லட்சத்திற்குபருத்தி விற்பனை
ராசிபுரம்:ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, வியாபாரிகளுக்கு ஆர்.சி.எம்.எஸ்., என்ற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்கிறது.
அதன்படி, ராசிபுரம் கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங் கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 949 மூட்டை பருத்தி விற்பனைக்கு வரத்தானது. ஒரு மூட்டையின் எடை, 100 கிலோ. ஆர்.சி.எச்., ரகம், 100 கிலோ குறைந்தபட்சம், 6,951 ரூபாய், அதிகபட்சம், 7,690 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,430 ரூபாய், அதிகபட் சம், 4,490 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 922 மூட்டை, கொட்டு, 27 மூட்டை என, மொத்தம், 949 மூட்டை பருத்தி, 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.