/உள்ளூர் செய்திகள்/கரூர்/காவிரி ஆற்றில் மணல் கடத்தல் 2 லாரி பறிமுதல்; இருவர் கைதுகாவிரி ஆற்றில் மணல் கடத்தல் 2 லாரி பறிமுதல்; இருவர் கைது
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் 2 லாரி பறிமுதல்; இருவர் கைது
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் 2 லாரி பறிமுதல்; இருவர் கைது
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் 2 லாரி பறிமுதல்; இருவர் கைது
ADDED : ஜன 06, 2024 11:57 AM
குளித்தலை: லாலாபேட்டை காவிரி ஆற்றில், லாரியில் மணல் கடத்திய இரு லாரிகளை பறிமுதல் செய்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, சிந்தலவாடி பஞ்., லாலாபேட்டை மேம்பாலம் அருகில் மேலசிந்தலவாடி காவிரி ஆற்றில், இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கடத்துவதாக, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு வந்த தகவல்படி, லாலாபேட்டை போலீசாருக்கு தெரியாமல் நேற்று அதிகாலை டி.எஸ்.பி.,யின் சிறப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து டாரஸ் லாரியில் மணல் நிரப்பி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பினர். இதில் சிக்கிய இருவரை போலீசார் பிடித்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
லாலாபேட்டை போலீசார், இருவரிடம் விசாரணை செய்தபோது, சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் வையாபுரி, 45, லாரி உரிமையாளர் குமார், 40, என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த விசாரித்தனர். அதில், திருச்சி மாவட்டம், சீனிவாசநல்லுார் பதனித்தோப்பை சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சீனிவாசன், 45, மற்றும் மகேந்திரமங்கலம் ராஜ்குமார், 30, உள்பட நான்கு பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். லாலாபேட்டை போலீசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்தனர்.