/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைதுகரூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
கரூர்: கரூர் அருகே வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய, இரண்டு பேரை கைது செய்தனர்.கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார், நேற்று கரூர் அருகே சணப்பிரட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், ரோந்து பணியில் ஈடுப ட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 12 மூட்டைகளில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 38; கணேஷ், 32; ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, வேன் மற்றும் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.