/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,533 வழக்குகளுக்கு தீர்வு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,533 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,533 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,533 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,533 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 05:03 AM
கரூர்: கரூர், குளித்தலையில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,533 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதி-மன்றம் நடந்தது.
அதில், வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,685 வழக்குகள் சம-ரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இறுதியாக, 1,533 வழக்-குகளில் தீர்வு காணப்பட்டு, 26 கோடியே, 14 லட்சத்து, 18 ஆயி-ரத்து, 500 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கரூரில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி இளவ-ழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்-குழு செயலாளர் அனுராதா மற்றும்
வக்கீல்கள் உடனிருந்தனர்.