/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை
சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை
சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை
சிவன் கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டு நிறைவு பூஜை
ADDED : ஜூன் 16, 2025 07:37 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில், செம்பொன் ஜோதீஸ்வரர் சிவன், தர்மசம்வர்த்தனி அம்மன் கோவில் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி, நேற்று காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது.
தொடர்ந்து, கோவில் உற்சவர் சுவாமிகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. கும்ப தீர்த்தம் கொண்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு வழிபாடு, பூஜை செய்யப்பட்டது. மாலை, லாலாப்பேட்டை முக்கிய வீதி வழியாக, உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சப்பரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.