Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 04, 2025 01:30 AM


Google News
கரூர், கரூர் தலைமை தபால்நிலையம் முன், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். 2025---26ம் ஆண்டில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வாகன பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் குளறுபடிகளை மறைத்து, உரிய நேரத்தில் சேவை கிடைக்காமல் போனதற்கு

காரணம், தொழிலாளர்கள் என்று கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை மறுப்பதுடன், இ.எஸ்.ஐ. போன்ற தொழிலாளர் நலத்திட்டகள் கிடைக்காமல் செய்யும் போக்கை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மண்டல மாநில செயலாளர் சிவக்குமார், மாநில பொருளாளர் சாமிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

கி.உதவியாளர்கள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்

கரூர், செப். 4

புகழூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகி உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகள் அடிப்படையில் வரும், 9ல், கரூர் கலெக்டரை சந்தித்து பேசுவது, வரும், 21ல் திருச்சியில் கோரிக்கை மாநாட்டில் திரளாக பங்கேற்பது, கோரிக்கை மாநாட்டிற்கான பங்கீடு தொகையை மாநில மையத்திற்கு வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தனலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவிகா, மாவட்ட இணை செயலர்கள் வெண்ணிலா, அருண்குமார், நாகலட்சுமி, கஸ்துாரி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us