/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா
மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா
மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா
மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா
ADDED : ஜூலை 03, 2024 03:03 AM
கரூர்;கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன.
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன், மின்வெட்டை தவிர்க்க, செடிகொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதிகளான வெங்கமேடு, பெரிய குளத்துப்பாளையம், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, திருமாநிலையூர், திருகாம்புலியூர், செல்லாண்டிபாளையம், காந்திகிராமம், கொளந்தானுார், ராயனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உள்ள, மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன.இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.இந்நிலையில், தென் மேற்கு பருவமழை விரைவில் தீவிரம் காட்ட துவங்கும். ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில், கரூர் வட்டார பகுதிகளில் காற்று பலமாக வீச தொடங்கியுள்ளது.இதனால், மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தென் மேற்கு பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.