/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்த நிலையில் நீரேற்று நிலைய தடுப்பு சுவர்கள் சேதமடைந்த நிலையில் நீரேற்று நிலைய தடுப்பு சுவர்கள்
சேதமடைந்த நிலையில் நீரேற்று நிலைய தடுப்பு சுவர்கள்
சேதமடைந்த நிலையில் நீரேற்று நிலைய தடுப்பு சுவர்கள்
சேதமடைந்த நிலையில் நீரேற்று நிலைய தடுப்பு சுவர்கள்
ADDED : ஜூலை 21, 2024 02:53 AM
கரூர்:கரூர் அருகே, குடிநீர் நீரேற்று நிலையத்தில் தடுப்பு சுவர்கள், சேதமடைந்த நிலையில் உள்ளது.
கரூர் மாவட்டம், நெரூர் காவிரியாற்றில் குடிநீர் நீரேற்று நிலையம் செயல்படுகிறது. அதன் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள, பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், காவிரியாற்றின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு, ஊழியர்கள் மற்றும் வாட்ச்மேன்கள் செல்ல வசதியாக கரையோர பகுதியில் இருந்து, உயர்மட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதையில் உள்ள, தடுப்பு சுவர்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால், நீரேற்று நிலையத்தின் ஊழியர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே நீரேற்று நிலையத்தின், தடுப்பு சுவர்களை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.