/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 03:30 AM
கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டி சமுதாயக்கூட வளாகத்தில், விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் மானாவாரி மற்றும் இயந்திரமய-மாக்கல் நடைமுறையின் கீழ், நிலக்கடலை சாகுபடி பயிற்சி வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு இஞ்சி பூண்டு கரைசல், மின்கரை சல், இலை கரைசல் தயாரிப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் கிருஷ்-ணராயபுரம் பஞ்சப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விதை, உயிர் உரம், இயற்கை பூச்சி, நோய் கட்-டுப்பாடு, இயற்கை பண்ணை கருவிகள், மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடியில் நீர் மேலாண்மை, வறட்சி மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்களுக்கு அவற்றை கட்-டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
வேளாண்மை அறிவியல் மைய தலைவர் திரவியம், உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சித், வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன் கலந்து கொண்டனர். 40 விவசாயிக-ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.