ADDED : ஜூலை 20, 2024 02:24 AM
அரவக்குறிச்சி;புன்னம்சத்திரத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புன்னம்சத்திரம் பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. அங்கு ஆய்வு செய்தபோது புகையிலை பொருட்கள் 10 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்த கனகராஜ், 52, என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.