/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரூ.4 கோடியில் தொடங்கிய குளம் சீரமைப்பு திட்டம் முடக்கம் ரூ.4 கோடியில் தொடங்கிய குளம் சீரமைப்பு திட்டம் முடக்கம்
ரூ.4 கோடியில் தொடங்கிய குளம் சீரமைப்பு திட்டம் முடக்கம்
ரூ.4 கோடியில் தொடங்கிய குளம் சீரமைப்பு திட்டம் முடக்கம்
ரூ.4 கோடியில் தொடங்கிய குளம் சீரமைப்பு திட்டம் முடக்கம்
ADDED : ஜூன் 09, 2024 04:23 AM
காங்கேயம்: காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட அகிலாண்டபுரத்தில் பதுமன் குளம் உள்ளது. ஆறு ஏக்கர் பரப்பிலான இந்தக்குளத்தின் மூலம், 50 ஆண்டுகளுக்கு முன், 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. நகராட்சியில் மக்கள் தொகை பெருகப் பெருக சாக்கடை கழிவுநீர் குட்டையாக மாறத் தொடங்கியது. நகராட்சியின் அனைத்து பகுதி கழிவுநீரும் இறுதியில் பதுமன் குளத்தை அடைகிறது. இதனால் நன்னீர் குளம் கழிவுநீர் குட்டையாக மாறியது. விவசாயத்திற்கு பயன்படுத்திய நீர் சாக்கடையானதால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
சாக்கடை நீர் பூமியில் இறங்கியதால் அப்பகுதி கிணறு, ஆழ்துளை கிணற்று தண்ணீரும், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிப்போய் விட்டது. இதையடுத்து பதுமன் குள பாசன விவசாயிகள் சங்கமும், மக்களும் குளத்தை துார் வார கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 2022 மே மாதம், 4.௦௪ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கியது. குளத்தை துார்வாருதல், நீர் சுத்திகரிப்பு, நடைபாதை, பொழுது போக்கு பூங்கா செயல்படுத்தப்படும் என அறிவித்தனர். இரண்டாண்டு முடிந்த நிலையில் குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். மற்ற எந்த பணிகளும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் குளத்தை துார்வாரி பணிகளை விரைவில் முடித்தால், நகராட்சியில் உப்பு நீராக உள்ள, 220 போர்வெல் கிணறுகள் நன்னீராக மாறி, குடிநீர் திட்டத்தில் காங்கேயம் நகராட்சி தன்னிறைவடையும் என்றும், சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.