Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாய்க்காலில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

வாய்க்காலில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

வாய்க்காலில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

வாய்க்காலில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

ADDED : ஜூலை 19, 2024 01:54 AM


Google News
குளித்தலை: குளித்தலை, தேவதானம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வெல்டர் தொழிலாளி சிங்காரவேலன். இவரது மனைவி- ராஜலட்-சுமி. இவர்களுக்கு தருண் என்ற 10 வயது மகன், தன்ஷிகா என்ற, 8 வயது மகள் உள்ளனர். தருண் தேவதானம் நகராட்சி துவக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிப்பு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை, ரயில்வே கேட் அருகே தண்ட-வாளம் அடியில், குறுக்கே செல்லும் பாசன கிளை வாய்க்காலில், தனது இரண்டு நண்பர்களுடன் தருண் குளிக்க சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக வாய்க்கால் அடியில், குழாய் வழியாக அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். இதையறிந்த அப்ப-குதியினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் கழித்து, 250 மீட்டர் துாரத்தில் வாய்க்காலில் இறந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டார்.

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கி-டங்கில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்-பட்டுள்ளது. குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் நீரில் மூழ்கி பலியானது, அப்பகுதியில் சோகத்தை ஏற்ப-டுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us