Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி

ADDED : ஜூன் 30, 2024 02:06 AM


Google News
கரூர், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில் ஜூலை, 11 ல் நடக்கிறது. கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கும், 6 முதல் பிளஸ் -2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

முதலிடம் பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கல்லுாரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லுாரி முதல்வரின் அனுமதியுடன், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை,- 04324 - 255077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us