/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சோதனையின் போது தள்ளு,முள்ளு கரூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சோதனையின் போது தள்ளு,முள்ளு
கரூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சோதனையின் போது தள்ளு,முள்ளு
கரூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சோதனையின் போது தள்ளு,முள்ளு
கரூர் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சோதனையின் போது தள்ளு,முள்ளு
ADDED : ஜூன் 05, 2024 06:28 AM
கரூர் : கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், சோதனையின் போது தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ., சார்பில் செந்தில்நாதன், காங்., சார்பில் ஜோதிமணி, அ.தி.மு.க., சார்பில் தங்கவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க காலை, 7.00 மணி முதல் அக்கட்சிகளை சேர்ந்த முகவர்கள் வர தொடங்கினர்.
அப்போது, கல்லுாரி வளாகத்தில் வெளியில் இருந்த போலீசார், அவர்களை பரிசோதனை செய்து அனுப்பினர். அங்கு, பெரும்பாலும் பெண் போலீசார் பணியில் இருந்தனர். அவர்கள், சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னால் வரிசையில் நின்றவர்கள் தள்ளியதால், முன்னாள் நின்ற சிலருக்கு காயம் ஏற்பட்டது. அதனால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.