/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 05:03 AM
கரூர் : கரூர், தான்தோன்றிமலை சாலையில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலை வழியாக, திண்டுக்கல்லுக்கு ஏராளமான வாக-னங்கள் செல்கின்றன. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் பெண்கள், மாணவியர் சங்கடத்திற்கு உள்ளாகின்-றனர். இரவில், குடிமகன்கள் சாலையோரம் நின்று ஆபாசமாக பேசுவதால், பெண்கள் தலைகாட்ட முடியவில்லை.
இதுமட்டுமல்லாது, சங்கிலி பறிப்பு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின், புகலிடமாகவும் இந்த டாஸ்மாக் கடை மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. முக்கியமான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினர் புகாரளித்தும் கூட, தொடர்ந்து கடை செயல்பட்டு வருகிறது.
அசம்பாவிதம் நடக்கும் முன் டாஸ்மாக் கடையை அப்பகு-தியில் இருந்து மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.