/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டி.என்.பி.எல்., மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல் டி.என்.பி.எல்., மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
டி.என்.பி.எல்., மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
டி.என்.பி.எல்., மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
டி.என்.பி.எல்., மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்
ADDED : ஜூலை 07, 2024 02:53 AM
கரூர்;டி.என்.பி.எல்., பள்ளியில் இலவச கல்வி பயிலும், 35 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தி தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை பொது மேலாளர் (பொ) தியாகராஜன் தலைமை வகித்தார். ஆலையின் சமுதாய பணிகள் திட்டத்தின் கீழ், நலிவுற்ற சமுதாயத்தை சேர்ந்த, 35 மாணவ, மாணவிகள் டி.என்.பி.எல்., பள்ளியில் இலவச கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டது.
ஆலை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.