/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'காலக்கெடுவுக்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்' 'காலக்கெடுவுக்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்'
'காலக்கெடுவுக்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்'
'காலக்கெடுவுக்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்'
'காலக்கெடுவுக்குள் படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம்'
ADDED : ஜூன் 14, 2024 01:35 AM
கரூர்,''வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அபராத தொகை செலுத்த நேரிடும்,'' என, வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.
கரூரில், வருமான வரித்துறை சார்பில், மாவட்டத்தில் வரி செலுத்துவோர் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் தலைமைவகித்து பேசியதாவது:
கடந்த ஆண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம், 18 சதவீதம். ஆனால் கடந்த ஆண்டில் திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல், 0.98 சதவீதம் மட்டுமே. இது மிகவும் குறைவாக உள்ளது. வரிசெலுத்துவோர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உரிய வரியை செலுத்த முன் வரவேண்டும்.
முன்கூட்டியே செலுத்தப்படும் வரியை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்டவேண்டும். முதல் தவணை ஜூன், 15-ம் தேதிக்குள்ளும் மீதமுள்ள தவணைகளை முறையே செப்., 15, டிசம்பர் 15, மார்ச் 15க்குள் கட்டவேண்டும்.
முன்கூட்டி செலுத்தும் வரி தாமதமாக செலுத்த நேரிட்டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரிடும். ஆகவே வரும் ஜூன், 15 தேதிக்குள் முதல் தவணை, 15 சதவீதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும். திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தர கணக்கு எண்கள் 30.74 லட்சமாகும். இதில், 3.09 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றனர். இது 10 சதவீதம் மட்டுமே.
அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில், 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படிவங்கள் வரிசெலுத்துவோர் மீதுள்ள நம்பிக்கையில் அப்படியே ஏற்று கொள்ளப்படுகிறது. வரிசெலுத்துவோர் கவனத்தில் கொண்டு படிவங்களை அதிக அளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அபராத தொகை செலுத்த நேரிடும்.
இவ்வாறு பேசினார்.