/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு;எச்சரிக்கை போர்டு வைக்க எதிர்பார்ப்பு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு;எச்சரிக்கை போர்டு வைக்க எதிர்பார்ப்பு
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு;எச்சரிக்கை போர்டு வைக்க எதிர்பார்ப்பு
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு;எச்சரிக்கை போர்டு வைக்க எதிர்பார்ப்பு
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு;எச்சரிக்கை போர்டு வைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 20, 2024 02:31 AM
கரூர்:அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்கும் இடங்களில், எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நேற்று காலை முதல் வினாடிக்கு, 1,458 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 87.64 அடியை தாண்டியுள்ளதால், எந்நேரமும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என, கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் போது, அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.இதையடுத்து கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆறு ஓடும் அரவக்குறிச்சி தாலுகா, கரூர் தாலுகா, கிருஷ்ணராயபுரம் தாலுகா பகுதிகளில் பொதுமக்கள் நாள்தோறும் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் செல்வர்.கரூர் நகரை பொறுத்தவரை செல்லாண்டி பாளையம், திருமாநிலையூர், பசுபதிபாளையம், சணப்பிரட்டி, மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி, பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள், அமராவதி ஆற்றில் குளிப்பது வழக்கம்.இந்நிலையில், பல ஆண்டு களாக அமராவதி ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் பல இடங்களில், 10 அடிக்கும் ஆழமாக குழிகள் உள்ளது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது, குழிகள் மறைந்துள்ளது தெரியாது.அப்போது, விபரம் தெரியாமல் பொது மக்கள் இறங்கி குளிக்கும் போது, புதை மணலில் சிக்கி உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. மணல் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவல் பொதுப்பணிதுறை, வருவாய் மற்றும் உள்ளூர் போலீசாருக்கு நன்கு தெரியும்.அந்த இடங்களை உடனடியாக கண்டறிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், எச்சரிக்கை போர்டுகளை வைக்க வேண்டியது அவசியம்.