மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
மொபட் மீது வேன் மோதி முதியவர் பலி
ADDED : ஜூலை 23, 2024 11:54 PM
அரவக்குறிச்சி : கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் மோளையாண்டிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 73; இவர் கடந்த, 22 மாலை சின்னதாரா-புரம் அருகே, ராஜபுரம் டாஸ்மாக் பகுதியில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ், 36, என்பவர் ஓட்டி சென்ற பொலீரோ வேன், பழனிசாமி மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனிசாமி தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இது கு-றித்து, பழனிசாமியின் மகன் சுப்பிரமணி அளித்த புகார்படி, சின்-னதாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.