/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை அருகே காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை குளித்தலை அருகே காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
குளித்தலை அருகே காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
குளித்தலை அருகே காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
குளித்தலை அருகே காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
ADDED : ஜூலை 19, 2024 08:21 PM

கரூர்:குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை நடைபெற்றது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சி, ராஜேந்திரம் தேவேந்திரகுல வேளாளர் தெருவில் மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள இரண்டு அம்மனுக்கு தங்கத்தில் தாலி அணிவிப்பதற்காக கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டினர்கள் அனைத்து பகுதி பொதுமக்கள் பங்களிப்புடன் தங்கத்தால் ஆன தாலி அணிவதற்கு முடிவு செய்தனர்.
இதையடுத்து விழா குழுவினர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களிடம் தாலி பிச்சை எடுத்தனர்.
நேற்று காலை கிராம பொதுமக்கள் ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்துக் குடம் எடுத்து ராஜேந்திரம் மலையாள சுவாமி ,மதுரை வீர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.
தீர்த்த குடத்தில் உள்ள புனித நீரை அம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது..
அன்று மாலை கிராம பொதுமக்கள் ராஜேந்திரம் மலையாள சுவாமி ,மதுரை வீர சுவாமி கோவிலில் இருந்து மாரியம்மன், காளியம்மன் கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்தனர்.
இன்று காலை 10 .00 மணி அளவில் கோவில் மண்டபத்தில் ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாலச்சந்தர், தொழிலதிபர் சகாதேவன் ஆகியோர்கள் தலைமையில் கிராம முக்கியஸ்தர்கள் ,விழா கமிட்டியினர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் யாக வேலி பூஜை செய்து புனித நீர் கும்பத்தில் மாங்கல்யம் வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை செய்தனர்.
தொடர்ந்து புனித நீர் அடங்கிய கும்ப த்தினை மாரியம்மன், காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் செய்தனர்.
பின்னர் மாங்கல்யத்தை மாரியம்மன், காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு பூஜையும் தீபாரதனையும் செய்தனர்.
இந்த மாங்கல்ய பூஜையில் ராஜேந்திரம், மருதூர், தண்ணீர்பள்ளி, மேட்டுமருதூர், உள்ளிட்ட சுற்று பகுதி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.