Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 28, 2024 01:12 AM


Google News
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசிய விபரம்:

முகிலன் ( தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்): குவாரி குத்தகை அனுமதி காலம் முடிவடைந்த பின்னரும், சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து கனிம கொள்ளையில ஈடுபட்டு வருகின்றனர்.

உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில் அஞ்சாக்கவுண்டன் பட்டியில் குத்தகை உரிமம் முடிவுற்ற பின்னரும், விதிமுறைகளை மீறி குவாரி பணி செய்து வருவது கண்டறியப்பட்டது. அந்த குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குத்தகை உரிமம் முடிவுற்ற புல எண்களில், குவாரி பணிகள் நடைபெறாத வண்ணம் சம்மந்தப்பட்ட வருவாய் துறையினர் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்வராஜ் (ஈசநத்தம்): தமிழக அரசு மூலம் அமைக்கப்பட்ட, குடகனாறு வல்லுனர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். வலது பிரதான வாய்க்கால் பணிகளை விரிவுபடுத்தி, இடது பிரதான வாய்க்காலை துார் வார வேண்டும்.

உதவி பொறியாளர். (குடகனாறு அணைப்பிரிவு அழகாபுரி): அறிக்கை வெளியிடுவதற்காக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து விரைவில் பதில் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். வலது பிரதான கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ராஜேந்திரன் (வீரணம்பட்டி): விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டு, மழை காரணமாக வண்டல் மண் எடுக்கவில்லை. இந்த அனுமதி காலத்தை நீட்டித்து தர வேண்டும்.

உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை: மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள, 20 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆணையின் கால நீட்டிப்பு வழங்க முடியாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us