/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இருளில் மூழ்கும் கரூர் ஆ.டி.ஓ., அலுவலகம் தரை தளமும் சேதமானதால் ஊழியர்கள் அவதி இருளில் மூழ்கும் கரூர் ஆ.டி.ஓ., அலுவலகம் தரை தளமும் சேதமானதால் ஊழியர்கள் அவதி
இருளில் மூழ்கும் கரூர் ஆ.டி.ஓ., அலுவலகம் தரை தளமும் சேதமானதால் ஊழியர்கள் அவதி
இருளில் மூழ்கும் கரூர் ஆ.டி.ஓ., அலுவலகம் தரை தளமும் சேதமானதால் ஊழியர்கள் அவதி
இருளில் மூழ்கும் கரூர் ஆ.டி.ஓ., அலுவலகம் தரை தளமும் சேதமானதால் ஊழியர்கள் அவதி
ADDED : ஜூலை 14, 2024 02:32 AM
கரூர்: கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாக தரைத்தளம் குண்டும், குழி-யுமாக உள்ளது. போதிய விளக்கு வசதி இல்லாதால் இரவு நேரங்-களில் அலுவலக வளாகம் இருளில் மூழ்கி காணப்படுகிறது.
கரூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலமாக தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த வளாகத்தில் பத்திரபதிவு அலுவலகம், வணிகவரி அலுவலகம், ஆபீசர்ஸ் கிளப் மற்றும் ஆர்.டி.ஓ., வின் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளது.
இதனால் நாள்தோறும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களும், வந்து செல்கின்றனர்.
அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தளம் பல மாதங்களாக, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், ஊழியர்கள், பொது-மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்-றனர். மேலும், பொது மக்கள், பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பழுதாகி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்-ளது.
இதனால், அலுவ லகத்துக்கு விசாரணைக்காகவும், புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் கூட, மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரி-வது இல்லை. அப்பகுதி இருளில் மூழ்குவதால், தற்கொலை வழக்கு, ஊர் பிரச்சனை, அமைதி பேச்சு வார்த்தை உள்ளிட்ட விசாரணைக்கு வரும் பொதுமக்கள் இருட்டில் காத்திருக்கின்-றனர்.
ஆர்.டி.ஓ., அலுவலக தரைத்தளத்தை புதிதாக அமைத்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடங்களை சீர-மைத்து, மின் கம்பத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும் என ஊழியர்கள் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்