/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:54 AM
கரூர், அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், புன்னம் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) காலி பணியிடத்தை, தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படுகிறது.
இதற்கு, எம்.காம்., பி.எட்.,கல்வித்தகுதி பெற்ற நபர்கள், உரிய சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ தரலாம். அதாவது இன்று முதல் ஜூலை 5- முடிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், முதல் தளம், அறை எண்.114, கரூர் - 639007 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.