/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சியில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் அரவக்குறிச்சியில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
அரவக்குறிச்சியில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
அரவக்குறிச்சியில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
அரவக்குறிச்சியில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 16, 2024 06:14 AM
அரவக்குறிச்சி : அதிகளவில் வரும் லாரிகளால், அரவக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரவக்குறிச்சியில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர பகுதியில் கனரக லாரிகள், சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. லாரிகள், பஸ்கள் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் காணப்படுகிறது. காலை, மாலை வேலைகளில் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் சேர்ந்து கொள்வதால் அதிகப்படியான நெரிசல் ஏற்படுகிறது.
அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகளை, புறவழிச்சாலையில் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.