/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம் நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்
நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்
நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்
நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்
ADDED : ஜூன் 25, 2024 02:12 AM
அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் பாலப்பட்டியை சேர்ந்தவர் கபிலன், 21. இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது காரில் இதே ஊரை சேர்ந்த சுப்ரமணி, 74, சிவகுமார், 45, மதிவதனன், 70, திருமூர்த்தி, 47, ஆகிய நான்கு பேருடன் கரூர் - திண்டுக்கல் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தண்ட
பாணி, 45, என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார், அதே நேரத்தில் இச்சிப்பட்டியை சேர்ந்த நல்லசாமி, 73, என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதி, நிலை தடுமாறி கபிலன் ஓட்டிய கார் மீது மோதியது. அடுத்தடுத்த ஏற்பட்ட விபத்தில், கபிலன் காரில் பயணித்த ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரும், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.