/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாலிடெக்னிக் கல்லுாரி தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வலியுறுத்தல் பாலிடெக்னிக் கல்லுாரி தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வலியுறுத்தல்
பாலிடெக்னிக் கல்லுாரி தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வலியுறுத்தல்
பாலிடெக்னிக் கல்லுாரி தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வலியுறுத்தல்
பாலிடெக்னிக் கல்லுாரி தடத்தில் கூடுதல் பஸ்கள் விட வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2024 02:53 AM
கரூர்: காணியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வழித்தடத்தில், கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக்கல்லுாரி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாவட்டத்தின், பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவிகளுக்கு போதுமானதாக இல்லை. கோடைக்கால விடுமுறை முடிந்து, இம்மாத இறுதியில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், காணியாளம்பட்டி அரசு பாலி டெக்னிக் அமைந்துள்ள, வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.