/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கூடலுார் மயானத்தில் மின் ஒயர் திருட்டு கூடலுார் மயானத்தில் மின் ஒயர் திருட்டு
கூடலுார் மயானத்தில் மின் ஒயர் திருட்டு
கூடலுார் மயானத்தில் மின் ஒயர் திருட்டு
கூடலுார் மயானத்தில் மின் ஒயர் திருட்டு
ADDED : ஜூலை 29, 2024 01:36 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் - கூடலுார் ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், கூடலுார் மயானம் உள்ளது. இங்கு கடந்த, எட்டு மாதங்களுக்கு முன், இரண்டு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. மின் இணைப்புக்காக, ஒயர்கள் தயார் செய்யப்பட்டு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் மின் ஒயரை துண்டித்து திருடிச் சென்றனர். அதன்பின், புதிய ஒயர் அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. சின்டெக்ஸ் தொட்டியை, ஐந்து மாதமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் மர்ம நபர்-கள மின் ஒயரை துண்டித்து, திருடி சென்றனர். இதனால், குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகு-றித்து குளித்தலை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.