Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சமூக நீதி பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை: வானதி

சமூக நீதி பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை: வானதி

சமூக நீதி பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை: வானதி

சமூக நீதி பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை: வானதி

ADDED : ஜூலை 03, 2024 03:09 AM


Google News
கரூர்:''சமூக நீதி பற்றி பேச, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை,'' என, தேசிய பா.ஜ., மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.கரூரில், மாவட்ட பா.ஜ., சார்பில் கரூர் லோக்சபா தொகுதி குறித்து, ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற தேசிய பா.ஜ., மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழக மக்களிடம், பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில், தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தி வருகிறோம். ஒரு காலத்தில், நோட்டோவுடன் போட்டி போட முடியாத கட்சி என, பா.ஜ.,வை எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தது. ஆனால், தற்போது நடந்த தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வை பல தொகுதிகளில் பின்னுக்கு தள்ளி உள்ளோம்.நடந்து முடிந்த சட்டசபை கூட்ட தொடரில், அமைச்சர்களின் பேச்சை கேட்கும் போது, படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற, தி.மு.க.,வின் வாக்குறுதி சாத்தியம் இல்லை என தெரிகிறது. வீதி வீதியாக மதுக்கடைகள் உள்ள நிலையில், கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத நிலையில் திறனற்ற அரசாக, தி.மு.க., உள்ளது.கள்ளச்சாராயத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பட்டியல் இன மக்கள்தான். இதனால், தி.மு.க.,வுக்கு சமூக நீதி பற்றி பேச அருகதை இல்லை.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க.,வுக்கு, பா.ஜ., ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். அங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் யாராக இருந்தாலும், சட்டரீதியாக வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us