தி.மு.க., கொடி கம்ப பீடம் உடைப்பு
தி.மு.க., கொடி கம்ப பீடம் உடைப்பு
தி.மு.க., கொடி கம்ப பீடம் உடைப்பு
ADDED : ஜூன் 25, 2024 02:10 AM
ப.வேலுார்: ப.வேலுாரில், தி.மு.க., கொடிக்கம்பம் நடுவதற்காக கட்டிய பீடத்தை, மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில், தி.மு.க., கொடி கம்பம் நட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன்படி, ப.வேலுாரிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் சாலையில் உள்ள, 12வது வார்டு கிழக்கு தெரு பகுதியில், தி.மு.க., கொடி கம்பம் நட பீடம் கட்டி வைத்திருந்தனர். அந்த பீடத்தை மர்ம நபர்கள், நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தினர். இதையறிந்த அப்பகுதி, தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த, தி.மு.க., பிரதிநிதி சூரிய
பிரகாசம் கூறுகையில், ''இன்னும் சில தினங்களில் கொடி கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் மர்ம நபர்கள் பீடத்தை உடைத்து சேதப்
படுத்தி உள்ளனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ப.வேலுார் போலீசாரிடம் புகாரளித்துள்ளோம். மேலும், நகர செயலாளர் முருகனிடம் தகவல் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.