/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஆடி வெள்ளியையொட்டி கரூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள் ஆடி வெள்ளியையொட்டி கரூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி வெள்ளியையொட்டி கரூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி வெள்ளியையொட்டி கரூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி வெள்ளியையொட்டி கரூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 20, 2024 02:30 AM
கரூர்;ஆடி வெள்ளியையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார கோவில்களில், பக்தர்கள் குவிந்தனர்.தமிழகம் முழுவதும் நேற்று, ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
கரூர் நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், மற்றும் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர். கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரமும், காந்தி கிராமம் மஹா மாரியம்மன் கோவிலில், மூலவருக்கு பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.வெண்ணைமலை, பவித்திரம், புகழூரில் உள்ள, பாலசுப்பிரமணிய கோவில் களிலும், ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் நேற்று குவிந்தனர்.* கரூர் அருகே வேலாயும்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புன்னம் சத்திரம் கரியாம்பட்டி பரமேஸ்வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், புன்னம் சத்திரம் பகவதி அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு அபி ேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், நீலமேகபெருமாள், முருகன், அய்யப்பன், தண்ணீர்பள்ளி புற்றுமாரியம்மன், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், செல்லாண்டியம்மன், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம் கொண்டு அபி ேஷகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.