/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா
தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா
தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா
தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 12, 2024 01:16 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பம் சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், முதல் பட்டதாரிகளின் பெற்றோர், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளருக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.
மேகலா தனசேகரன் தலைமை வைத்தார். வழக்கறிஞர்கள் குமார், பாலகுமார், ரதி, போஸ்ட்மேன் கருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருதுார் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன், தனி தாசில்தார் தீபதிலகை ஜெயவேல் காந்தன் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் ரவிச்சந்திரன், மருதூர் நகர தி.மு.க., இளைஞரணி செயலர் வினோத்குமார் தொகுத்து வழங்கினர்.
துணை தாசில்மார் ஜெயவேல் காந்தன், மத்திய, மாநில அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாக குழு டி.என்.பி.எல்., ரவிச்சந்திரன், வீர தேவேந்திரகுல வேளாளர் மாநில செயலாளர் கட்டளை விஜி உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.