/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு அனுமதி மறுப்பால் நிருபர்கள் தர்ணா வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு அனுமதி மறுப்பால் நிருபர்கள் தர்ணா
வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு அனுமதி மறுப்பால் நிருபர்கள் தர்ணா
வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு அனுமதி மறுப்பால் நிருபர்கள் தர்ணா
வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு அனுமதி மறுப்பால் நிருபர்கள் தர்ணா
ADDED : ஜூன் 05, 2024 03:02 AM

கரூர்:கரூர், எம்.குமாராசாமி பொறியியல் கல்லுாரி மையத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. காங்., ஜோதிமணி, அ.தி.மு.க., தங்கவேல், பா.ஜ., செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே, காங்., வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார். இவர் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை விட, 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேலிடம் வெற்றிக்கான சான்றிதழை ஜோதிமணி பெற்றார்.
இதை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க சென்ற செய்தியாளர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், கரூர் பி.ஆர்.ஓ., செந்திலிடம் சென்று, புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, கல்லுாரி வளாகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சான்றிதழ் பெற்றவுடன் ஜோதிமணி சென்றுவிட்டதால், நிருபர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.