/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் 13 அலுவலர்கள் கட்டாய பணி மாறுதல் கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் 13 அலுவலர்கள் கட்டாய பணி மாறுதல்
கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் 13 அலுவலர்கள் கட்டாய பணி மாறுதல்
கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் 13 அலுவலர்கள் கட்டாய பணி மாறுதல்
கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் 13 அலுவலர்கள் கட்டாய பணி மாறுதல்
ADDED : ஜூலை 21, 2024 03:02 AM
கரூர்;கரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், 13 கல்வித்துறை அலுவலர்களுக்கு கட்டாயமாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
கரூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியராக பணி உயர்வுக்கு, 13 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் ஒன்பது பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இருவர் பதவி உயர்வுக்கு விரும்பமின்மை என தெரிவித்து விட்டனர்.
முன்னதாக முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. அதில், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு, கட்டாய பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 13 இளைநிலை உதவியாளர்கள், மூன்று தட்டச்சர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்கப்பட்டது. பணி மாறுதல் கேட்டு, 10 இளநிலை உதவியாளர்கள், இரண்டு தட்டச்சர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், நான்கு இளநிலை உதவியாளர்கள், ஒரு தட்டச்சர் பணி மாறுதல் பெற்றனர்.