ADDED : ஜூலை 21, 2024 02:52 AM
கரூர்;கரூரில், பல்வேறு பகுதிகளில் கலர் கோழிக்குஞ்சு விற்பனை களை கட்டியது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், தான்தோன்றிமலை, சுங்ககேட் போன்ற பகுதிகளில் அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அங்கு, கண்களை கவரும் வகையில் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணங்கள் தீட்டப்பட்டு கோழி குஞ்சுகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலர் கோழி குஞ்சுகளை வாங்கிச் செல்கின்றனர்.