/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி வாலிபர் காயம் டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி வாலிபர் காயம்
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி வாலிபர் காயம்
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி வாலிபர் காயம்
டூவீலர் மீது கல்லுாரி பஸ் மோதி வாலிபர் காயம்
ADDED : ஜூன் 30, 2024 01:34 AM
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி தாலுகா, புஞ்சைகாளிக்குறிச்சி அருகே உள்ள பெரியவாணிக்கரை காலனி பகுதியை சேர்ந்த குப்பன் மகன் ஆனந்தன், 45. இவர், நேற்று பெரியவாணி கரையிலிருந்து நஞ்சைகாளிக்குறிச்சி சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அதே சாலையில் எதிர் திசையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சர்க்கரை வலசு பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் காந்திராஜ், 28, என்பவர் ஓட்டி வந்த, கரூரில் செயல்படும் தனியார் கல்லுாரி பஸ் ஆனந்தன் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக, கல்லுாரி பஸ் டிரைவர் காந்திராஜ் மீது, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.