/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாப்பகாப்பட்டி கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் பாப்பகாப்பட்டி கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
பாப்பகாப்பட்டி கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
பாப்பகாப்பட்டி கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
பாப்பகாப்பட்டி கிராமத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஜூலை 19, 2024 01:50 AM
கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டி கிராமத்தில், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் சமுதாய கூடத்தில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி கிராமத்தில், 'மக்க-ளுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்தது. இதில், வருவாய்த்-துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திற-னாளிகள் நலத்துறை, மின்வாரியம், கால்நடை பராமரிப்பு, பால்-வளம், காவல்துறை, கூட்டுறவுத்துறை கடன் உதவி, மற்றும் பல துறைகளில் உள்ள அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு, மக்-களிடம் மனுக்களை பெற்று பதிவு செய்தனர். அந்த மனுக்கள் அந்தந்த துறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட உள்ளது.
முகாமில், தாசில்தார் மகேந்திரன், மண்டல துணை தாசில்தார் சந்-தான செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வித்யாவதி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் கதி-ரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன், வயலுார், பாப்ப-காப்பட்டி, சிவாயம் பஞ்., தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ பரிசோதனை
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், குழந்தைகள் மருத்-துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், இலவச-மாக பார்க்கப்பட்டன. மேலும், மருந்து, மாத்திரைகள் வழங்கப்-பட்டன. டாக்டர் கங்காதேவி, மருத்துவ ஆலோசனை வழங்-கினார். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்-வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் சமு-தாய கூடத்தில் ஊரக பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், அரசு துறைச்சார்ந்த அலுவ-லர்கள், தங்களது துறை சார்ந்த மனுக்களை பெற்று பதிவு செய்து, அதற்கான ரசீதை வழங்கினர். இந்த திட்டத்தில், கே.பேட்டை, வைகைநல்லுார், வதியம், மணத்தட்டை ஆகிய, நான்கு பஞ்., பகுதியை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை மனுக்-களை வழங்கினர்.
இதேபோல், தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், எம்.எல்.ஏ., மாணிக்கம் மனுக்கள் பெற்றார்.
மாவட்ட பஞ்., குழு துணைத்
தலைவர் தேன்மொழி தியாகராஜன், பஞ்., தலைவர்கள் கே.பேட்டை தாமரைச்செல்வி, வைகைநல்லுார் சுமதி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், தாசில்தார் சுரேஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், பஞ்., முன்னாள் தலைவர் சுப்பிரமணி, வதியம் பஞ்., துணைத்தலைவர்
தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.