/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார் மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்
மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்
மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்
மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்
ADDED : ஜூலை 21, 2024 03:03 AM
கரூர்;சின்னதாராபுரம் அருகே மனைவி, மகளை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தொக்குப்பட்டி புதுார் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 34; பெயின்டர். இவருக்கு பரமேஸ்வரி, 25, என்ற மனைவி, பிரித்திக்ஷா, 6, என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 17ல் பரமேஸ்வரி, பெண் குழந்தை பிரித்திக்ஷாவுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் பரமேஸ்வரி செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் குமார், போலீசில் புகார் செய்தார்.
சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.