/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான முத்துலாடம்பட்டி சாலை குண்டும், குழியுமான முத்துலாடம்பட்டி சாலை
குண்டும், குழியுமான முத்துலாடம்பட்டி சாலை
குண்டும், குழியுமான முத்துலாடம்பட்டி சாலை
குண்டும், குழியுமான முத்துலாடம்பட்டி சாலை
ADDED : ஜூன் 10, 2024 01:16 AM
கரூர்: தொடர் மழையால் குண்டும், குழியுமாக மாறிய காந்தி கிராமம் -- -முத்துலாடம்பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில், திண்டுக்கல் பிரதான சாலையில் இருந்து தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம், அன்பு நகர், பசுபதிபுரம், காந்தி கிராமம் வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முத்துலாடம்பட்டி சாலை செல்கிறது. தற்போது பெய்யும் மழையால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் போதிய மின் விளக்கு வசதியில்லாததால், இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.