/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சரக்கு வாகனம் மீது பைக் மோதி பேக்கரி மாஸ்டர் பலி சரக்கு வாகனம் மீது பைக் மோதி பேக்கரி மாஸ்டர் பலி
சரக்கு வாகனம் மீது பைக் மோதி பேக்கரி மாஸ்டர் பலி
சரக்கு வாகனம் மீது பைக் மோதி பேக்கரி மாஸ்டர் பலி
சரக்கு வாகனம் மீது பைக் மோதி பேக்கரி மாஸ்டர் பலி
ADDED : ஜூன் 19, 2024 02:19 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், 26, பேக்கரி மாஸ்டர்.
இவர் ஸ்டார் சிட்டி பைக்கில், அதே ஊரை சேர்ந்த இவருடைய மாமா சக்திவேலுடன், 35, நேற்று மதியம், 3:30 மணியளவில் அய்யர்மலை சென்று விட்டு, குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சக்திவேல் பைக் ஓட்ட, பின்னால் அய்யப்பன் அமர்ந்து வந்தார். சந்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் பழைய இரும்பு கடையில் மூன்று சக்கர சரக்கு வாகனத்தில், பழைய பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தபோது, சரக்கு வாகனம் மீது பைக் மோதியது. இதில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சக்திவேல், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.