UPDATED : ஜூன் 08, 2024 12:57 PM
ADDED : ஜூன் 08, 2024 10:59 AM

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் ஊராட்சி அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக இருந்து வருகிறது.
கடல் மட்டத்திலிருந்து 1117 அடி உயரத்திலும், செங்குத்தாக 1017 படிகள் கொண்டது. பக்தர்கள் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் வணங்கி வருகின்றனர். மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத குழந்தைகள், முதியோர்கள், நலன் கருதி கோவிலுக்கு ரோப் கார் (கம்பிவட ஊர்தி) அமைக்கப்பட்டு வருகிறது. ரோப் கார் பணி முடியும் தருவாயில் இருந்து வருகிறது
கடந்த 3ஆம் தேதி இந்த ரோப் கார் திருப்பணி வேலைகளின் நிறைவு பணிகளை தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் பெரியசாமி மதியம் நேரில் ஆய்வு செய்தார். ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்கள் பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். ரோப் கார் பணி அனைத்தும் முடித்து அடுத்த வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காற்றினால் ரோப் கார் அடித்தளத்தில் உள்ள தார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பம் அடியுடன் சாய்ந்தது சில மின்கம்பம் தரம்மற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கோவில் பக்தர்கள் பாதிக்காத வகையில் புதியதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மீண்டும் தரமாக அமைக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள், ஹிந்து சமய அறநிலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.