/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபர் ஓட்டம் மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபர் ஓட்டம்
மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபர் ஓட்டம்
மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபர் ஓட்டம்
மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபர் ஓட்டம்
ADDED : ஜூன் 16, 2024 12:58 PM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., மாஜி அமைச்சரின் உறவுக்கார பெண்ணை, சில்மிஷம் செய்த, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்-ஈரோடு சாலை கோதை நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 82; முன்னாள் அமைச்சர். அ.தி.மு.க., அமைப்பு செயலாளர். இவரது வீட்டுக்கு, நேற்று இரவு சேலத்தை சேர்ந்த, 42, வயது உறவுக்கார பெண் ஒருவர் பத்திரிக்கை கொடுக்க வந்தார். பிறகு, கோதை நகரில் இருந்து பஸ்சில், அந்த பெண், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு புறப்பட்டார். அப்போது, பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
அப்போது அந்த பெண், வாலிபரை எச்சரித்துள்ளார். ஆனால், தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபரை, பஸ் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும், பெண் அடித்துள்ளார். பதிலுக்கு, அந்த வாலிபரும் பெண்ணை அடித்துள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதால், வாலிபர் தப்பினார். தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி, பஸ் ஸ்டாண்ட் வந்தார். அந்த பெண் கரூர் டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்து விட்டு, பஸ்சில் சேலம் புறப்பட்டு சென்றார்.இச்சம்பவத்தால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.