/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் 804 போலீசார் பாதுகாப்பு:எஸ்.பி., கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் 804 போலீசார் பாதுகாப்பு:எஸ்.பி.,
கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் 804 போலீசார் பாதுகாப்பு:எஸ்.பி.,
கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் 804 போலீசார் பாதுகாப்பு:எஸ்.பி.,
கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் 804 போலீசார் பாதுகாப்பு:எஸ்.பி.,
ADDED : ஜூன் 04, 2024 04:24 AM
கரூர்: கரூர் லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணும் மையத்தில், 804 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கரூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் தங்கவேல், காங்., சார்பில் ஜோதிமணி, பா.ஜ., சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட, 54 பேர் போட்டியிடுகின்றனர். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதற்காக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து, கரூர் எஸ்.பி., பிரபாகர் விடுத்துள்ள அறிக்கை:
கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், எனது தலைமையில், இரண்டு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஏழு டி.எஸ்.பி.,க்கள், 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 97 எஸ்.ஐ.,க்கள், 373 சட்டம்-ஒழுங்கு போலீசார், 24 போக்குவரத்து போலீசார், 63 ஆயுதப்படை போலீசார், 39 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், 153 ஊர்க்காவல் படையினர், 24 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட, 804 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.