/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 12, 2024 01:19 AM
கரூர், ஜவேனில் கடத்தப்பட்ட, 550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை-துளசி கொடும்பு பஸ் ஸ்டாப்பில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா, 50 கிலோ எடை கொண்ட, 11 சாக்குமூட்டைகளில் இருந்த, 550 திலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக திண்டுக்கல்லை சேர்ந்த, குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, 550 கிலோவையும், பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.