ADDED : ஜூன் 28, 2025 07:54 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள். உர விதைகள் வினியோகம், மண்புழு உர உற்பத்தியை ஊக்குவித்தல், இயற்கை இடுபொருள் தயாரித்தல், மையம் அமைத்தல், உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணை திடல் அமைத்தல், வேப்பமர கன்றுகள் வினியோகம் மற்றும் உயிரிய பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்கள் வளர்த்திடுவதற்கான ஆடாதோடா நொச்சி நடவு பொருட்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தல்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிநபர் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றுதல்,
பயிர் வகைகளில் வரப்பு பயிர்களை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கத்திடல் மற்றும் தெளிப்பான் வினியோகம்.தமிழ்நாடு சிறு தானிய இயக்கத்தின் கீழ், சிறுதானிய விவசாய குழு உருவாக்குதல் மற்றும் மாற்றுப்பயிர் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை ஊக்குவிக்கும் திட்டம், ஊடுபயிராக துவரை சாகுபடியினை ஊக்குவிக்க மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
மத்திய அரசு பங்களிப்பு திட்டங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் உளுந்து, சோளம், கொள்ளு விதை, உயிர் உரங்கள் டி.விரிடி சூடோமோனாஸ் நுண்ணுாட்டங்கள், தார்பாலின், நானோ யூரியா மற்றும் அசாடிராக்டின் மானிய விலையில் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள், அரவக்குறிச்சி வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.