. வாங்கல் அருகே மது விற்ற பெண் கைது
. வாங்கல் அருகே மது விற்ற பெண் கைது
. வாங்கல் அருகே மது விற்ற பெண் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:32 AM
அரவக்குறிச்சி, ஜூன் 30-
வாங்கல் அருகே சட்ட விரோதமாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வாங்கல் அருகே கோயம்பள்ளி பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நெடுஞ்செழியன் மனைவி மலர்விழி, 53, என்பவர் அவரது வீட்டின் பின் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 3,500 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை வாங்கல் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.