/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம் அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்
அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்
அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்
அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்
ADDED : ஜூலை 22, 2024 08:43 AM
கரூர் : கரூர், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் மாயவன், 40; அவரது மனைவி ஜோதிலட்சுமி, 39; அங்கன்வாடி ஊழியர்.
தம்பதியருக்கு, 14, 12, 7 வயதில் மூன்று மகள்கள். இந்நிலையில், கடந்த மாதம், 10ல் மாயவன் அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் பெண் குழந்தைகளுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், ஐந்து பேரும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், மாயவன் குடும்பத்தினர் செல்லவில்லை. அதிக கடன் காரணமாக, மாயவன் குடும்பத்துடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாயவனின் சகோதரர் கண்ணதாசன், 37, போலீசில் புகாரளித்துள்ளார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.