/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு
மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு
மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு
மகன் ஜீவனாம்சம் கொடுக்க மறுப்பு கரூர் கலெக்டரிடம் மூதாட்டி மனு
ADDED : ஜூலை 23, 2024 01:35 AM
கரூர : 'ஒரு மகன் ஜீவனாம்சம் வழங்க மறுத்து வருகிறார்' என, கரூர் மாவட்டம் கடவூர் அருகில் கோடங்கிப்பட்டியை சேர்ந்த மாரம்மாள், கரூர் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் கடவூர் அருகில் கோடங்கிப்பட்டியில் வசித்து வருகிறேன். எனக்கு, 78 வயது ஆகி விட்டதால் கண் பார்வை குறைப்பாடு உள்பட பல்வேறு உடல் பாதிப்புகளாக சிரமப்பட்டு வருகிறேன். இரண்டு மகன்-களும் கவனிக்கவில்லை என்பதால், நீதிமன்றந்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில், இரண்டு மகன்களும் மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்-டது. அதில், இளையமகன் முறையாக பணம் அளித்து வருகிறார். மூத்த மகன் பணம் கொடுக்க மறுத்து வருகிறார். இது குறித்து கேட்டால், என்னை அடிக்க வருகிறார். என் வயது மூப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.