Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின் தடை

கரூரில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின் தடை

கரூரில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின் தடை

கரூரில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின் தடை

ADDED : ஜூலை 22, 2024 08:39 AM


Google News
கரூர், : கரூரில் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக, மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்கள் மூலம் மின் வினியோகம் நடக்கி-றது. கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் வழித்தடங்களில் மின் கம்-பிகள் தளர்ந்து தொங்கியபடி உள்ளன. இந்நி-லையில், கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுகிறது. மேலும், பல இடங்களில் மரக்கிளைகள், உயர்ந்து வளர்ந்த முள் செடிகள் மீது மின் கம்பிகள் உரசி பாதிப்பு ஏற்படுகிறது. தென்னை மரங்களிலிருந்து விழும் தென்னை மட்டைகளாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகி-றது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: மாவட்-டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில், பல கிரா-மங்களில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல இடங்களில் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக தொங்கியபடி உள்-ளது. தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால், மின்கம்பிகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தளர்வான மின் கம்பிகள் குறித்து மின் துறையி-னரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பரா-மரிப்புக்காக மாதம் ஒரு முறை மின்தடை செய்-யப்படுகிறது. மின் கம்பிகளில் உரசும் மரக்கி-ளைகளை மட்டும் வெட்டி விடுகின்றனர். மற்ற பராமரிப்பு பணிகள் செய்வதில்லை. இரவில் மின்தடை ஏற்பட்டால் சரி செய்ய முடிய-வில்லை. தளர்வான மின் கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us