கம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
கம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
கம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜூலை 14, 2024 03:18 AM
கிருஷ்ணராயபுரம்: வரகூர் கிராமத்தில், சிறு தனிய பயிரான கம்பு சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர், கண்ணமுத்தாம்பட்டி, புதுப்-பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் பரவலாக கம்பு சாகுபடி செய்து வருகின்றனர். கம்பு பயிர்களுக்கு, கிணற்று பாசன மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, கம்பு பயிர் செழிப்பாக வளர்ந்து, கதிர்கள் விளைச்சலடைந்துள்ளன.
சில நாட்களில் அறுவடை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என, விவசா-யிகள் எதிர்பார்த்துள்ளனர்.