/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
பணி செய்யவிடாமல் தடுத்த பெண் நுாலகர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2024 08:53 AM
குளித்தலை : குளித்தலை அருகே, பணியை செய்ய விடாமல் தடுத்த, பெண் ஊர்ப்புற நுாலகர் மீது வழக்குப்ப-திவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அடுத்த காணியாளம்பட்டியில், ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில் குன்னச்சத்திரத்திலிருந்து புற நுாலகர் செந்தில்குமார், 44, மாவட்ட நுாலக அலுவலரின் செயல்முறை ஆணையின்படி, இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த, 9ம் தேதி காணியாளம்பட்டி நுாலகத்தில் ஊர்ப்புற நுாலக-ராக பணியில் இருந்து வந்தார். இங்கு பணியில் இருந்த புதுார் சுக்காம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி, 42, என்பவர் சின்னப்பனையூர் ஊர்ப்-புற நுாலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்-பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் நுாலகர் செந்தில்கு-மாரை பணி செய்யவிடாமல் தடுத்தும், நுாலகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அரசு பணி செய்ய விடாமல் உமா மகேஸ்வரி இடையூறு செய்துள்ளார்.
இது தொடர்பாக, செந்தில்குமார் கொடுத்த புகார்-படி, நுாலகர் உமா மகேஸ்வரி மீது, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.